
தமிழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருக்கிறது? ஈமெயில்களை நம்ப வேண்டாம்..!!!
தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்தது தங்களது கல்லூரி வாழ்க்கையை தொடங்க உள்ளனர். அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது.
இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் மாணவர்களை ஏமாற்றி கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பணம் மோசடியானது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அரங்கேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் ஈமெயில் அனைத்தும் போலியானது என்றும் அதனை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவலுக்கு www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் சென்று அணுகுங்கள் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
