நான்காவது முறையாக இணையும் ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் கூட்டணி! ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பு!!

தமிழ் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து தற்போது இந்திய சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் அட்லி. இவர் தமிழ் சினிமாவின் தளபதி விஜயின் கொண்டு 3 பிளாக்பஸ்டர் படத்தினை இயக்கி இருந்தார்.

vijay-atlee

அதன்படி தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் அட்லி யும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் கொண்டு லயன் என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டணி ஆனது தளபதி 67 திரைப்படத்தில் இணையும் என்று கூறப்படுகிறது. தளபதி 67 திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் பிகில் திரைப்படத்தினை தயாரித்தும் குறிப்பிடத்தக்கது.இதனால் பிகில் கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment