இந்தியாவில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா? 16 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்த பாதிப்பு மீண்டும் இந்தியாவில் ஆரம்பிக்க தொடங்கிவிட்டதாக காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா

அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஒரே நாளில் 16764 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியாவில் நேற்று 13 ஆயிரத்து 154 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 16 ஆயிரத்து 764 அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 22 ஆயிரத்து 40 லிருந்து 3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 804 அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் குணமடைந்த எண்ணிக்கையும் 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரத்து 778 லிருந்து 3 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 7 ஆயிரத்து 585 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 220 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 860 லிருந்து 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91361 ஆக அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment