Connect with us

இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கி விட்டதா இலங்கை? திருவிழாவிற்கு இந்தியர்கள் வர தடை!

Untitled 105

செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கி விட்டதா இலங்கை? திருவிழாவிற்கு இந்தியர்கள் வர தடை!

இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கி விட்டதா இலங்கை? திருவிழாவிற்கு இந்தியர்கள் வர தடை!

தொடர்ச்சியாக தமிழ் மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.

அதன் உச்சகட்டமாக இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 விசைப்படகுகள், நாட்டு படகுகளை ஏலத்தில் விட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இலங்கை அரசு தற்போது இந்தியர்களுக்கு எதிரான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி கச்சத் தீவில் நடைபெற உள்ள திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க தடை விதித்து இலங்கை அரசு கூறியுள்ளது.

புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் நடைபெறும் மார்ச் 11, 12ஆம் தேதி நடைபெறும். திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top