குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் சிம்பு. ஆனால் இவர் நடிப்பை தவிர மற்ற விஷயங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். திரைபிரபலங்கள் கிசு கிசுக்களில் சிக்குவது வழக்கம் தான். ஆனால் சிம்பு சிக்காத கிசு கிசுவே கிடையாது.
முன்னதாக நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் காதல் உறவில் இருந்த சிம்பு அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து பல நடிகைகளுடன் அவர் இணைத்து பேசப்பட்டு வந்தார். இதுதவிர பல பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார்.
உதாரணமாக படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வருவது, அப்படியே வந்தாலும் கேராவேனில் சென்று ஓய்வெடுப்பது என பலர் சிம்பு குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்கள். இதற்கிடையில் உடல் எடை அதிகரித்து பட வாய்ப்புகள் இல்லாமல் சில நாட்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். தொடர்ந்து படங்களும் தோல்வி அடைந்தது.
அந்த சமயத்தில் தான் இயக்குனர் வெங்கட்பிரபு உடன் கைகோர்த்து மாநாடு என்ற வெற்றி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இதுவரை சிம்புவின் திரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மாநாடு படம் வெற்றி பெற்றதோடு, 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையும் படைத்தது. இதனை தொடர்ந்து இனி சிம்பு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிம்பு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி ஈஸ்வரன் படத்தின் போது அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை நித்தி அகர்வால் தற்போது சிம்புவுடன் ஒரே வீட்டிலிருந்து தங்கி உள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் கோலிவுட்டில் மீண்டும் சிம்பு அவரின் ஆட்டத்தை தொடங்கி விட்டார் என கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டார்கள்.