என்ன சொல்றீங்க..! 22 ஆண்டுகளாக ’சிக்கன்’ மட்டும் தான் சாப்டிங்களா ?
22 ஆண்டுகளாக சிக்கன் மட்டுமே சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஒரு இளம்பெண். கடந்த 22 ஆண்டுகளாக காய்கறிகள் மற்றும் பழங்களை அவர் சாப்பிடாமல் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து கேம்பிரிச் நகரை சேர்ந்தவர் சம்ரோ மன்ரோ. 25 வயது ஆன இந்த பெண்ணிற்கு மூன்று வயதில் இருந்தே உணவுடன் உருளைக்கிழங்கை பிசைந்து கொடுப்பார்களாம். அந்த உணவால் சிறுமியான சம்ரோ மன்ரோவிற்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது.
உணவு கோளாறு நீங்குவதற்காக சிகிச்சை அளித்த போதும் அது பலன் தரவில்லை. இதனால் வேறுவழியின்றி சிக்கன் கட்டிகள் , சிக்கன் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டே உயிர் வாழ்ந்து வருகிறார். கோடைகாலத்தில் காலையில் அவர் உணவு எதையும் சாப்பிடுவது இல்லையாம். மதிய வேளையில் மட்டும் 6 முதல் 8 சிக்கன் துண்டுகளை அவர் சாப்பிடுகிறார்.
நான் நன்றாக சாப்பிட வேண்டும் என்று என்னுடைய தாத்தா விரும்புவதாக அந்த பெண் கூறியுள்ளார். நான் ஆப்பிள் சாப்பிட முயன்றேன் ஆனால் என்னுடைய உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சைவ உணவுகளை சாப்பிட பயமாக இருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் சாம்ரோ மான்ரோ.
