டுவிட்டரை விட்டு வெளியேறிவிட்டாரா நடிகர் சித்தார்த்?

e72df7d4500b1d97ac48ae1c04e713cd

கடந்த அதிமுக ஆட்சியின் குற்றம் குறைகளை ஆவேசமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நடிகர் சித்தார்த், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் நிறைகளை மட்டுமே பதிவு செய்து வருகிறார் என்றும் குறைகளை பதிவு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி மத்திய அரசை காரசாரமாக விமர்சனம் செய்யும் சித்தார்த் மாநில அரசை விமர்சனம் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வை தமிழகத்திலிருந்து விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக அரசு குறித்து சித்தார்த் எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என்று நெட்டிசன் ஒரு கேள்வி கேட்டதற்கு நேற்று சித்தார்த் காரசாரமாக பதில் அளித்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பதிலுக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் திடீரென சித்தார்த், டுவிட்டரில் இருந்து விலகுவது போன்ற ஒரு தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேன்சல்டு பை என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த செய்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் சமீபத்தில் எந்த டுவிட்டையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.