News
கொள்ளைக் கும்பலை பிடிக்க ஹரியானா விரைந்து சென்றது தனிப்படை!
சில தினங்களாக சென்னையில் அதிகமாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதுவும் குறிப்பாக வங்கியில் பண மோசடி செய்வது ஏடிஎம்களில் பணம் சுருட்டுவது போன்றவை அதிகமாக நம் தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது. இதனிடையே சில தினங்களாக எஸ்பிஐ வங்கி கொள்ளையர்கள் கைவசம் செய்துவருகின்றனர். எஸ்பிஐ வங்கி டெபாசிட் செய்யும் ஏடிஎம் இடைக்கால தடை விதித்துள்ளது. மசென்னையில் மட்டுமே விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு ஹரியானா சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
இதை தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க ஹரியானா விரைந்து சென்று உள்ளது தனிப்படை. மேலும் அவர்கள் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் சென்சாரை மறைத்து நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் வெளியாகிறது. மேலும் பணம் திருடிய கும்பலை பிடிக்க காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் 48 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை விரைந்து பிடிக்க தனிப்படை விரைந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
