“அவரு அப்பவே அப்படித்தான்”.. மன்சூர் அலிகான் பற்றி மலையாள நடிகர் சொன்ன திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமாவில் அடிக்கடி ஏதாவது பேசி, சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளவர் நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் சமீபத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னதாக, ஏதாவது பேட்டி கொடுக்கும் சமயத்தில் அல்லது ஏதாவது நேர்காணல்களின் போது ஏதாவது முன்னுக்கு பின் முரணாக பேசி சிக்கிக் கொள்வார்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசி இருந்த கருத்து ஒன்று, கடும் கண்டனங்களை உருவாக்கியதுடன் மட்டுமில்லாமல் வழக்கு வரைக்கும் சென்றது. பழைய திரைப்படங்களில் வரும் கற்பழிப்பு காட்சிகளை போல, தனக்கு லியோ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவுடன் காட்சிகள் அமையவில்லை என மன்சூர் அலிகான் குறிப்பிட்டிருந்தார்.
1698487987 2

இப்படி வெளிப்படையாக ஒரு நடிகை பற்றி அவர் பேசியது, சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. திரிஷாவும் இது தொடர்பாக தனது ஆவேசமான கருத்துக்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட, தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கூட மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்புகளை குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே, மன்சூர் அலிகான் பல ஆண்டுகளுக்கு முன் மலையாள திரைப்படத்தில் செய்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான செயல் ஒன்று அதிக கவனம் பெற்று வருகிறது.

மலையாள சினிமாவின் பிரபல நடிகரான ஹரிஸ்ரீ அசோகன், மன்சூர் அலிகான் காரணமாக ஷூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், “சண்டைக் காட்சி ஒன்றில் மன்சூர் அலிகான் எங்களை தாக்குவது போல படமாக்கப்பட்டிருந்தது. அப்போது நிஜமாகவே அவர் எங்களை அடிக்க ஆரம்பித்து விட்டார். நாங்கள் இனிமேல் கவனமாக இருக்கும்படி கூறியும் மீண்டும் எங்களை நிஜமாகவே அடித்தார்.
trisha mansoor ali khan ncw 201557254 16x9 0

இதனால் கோபம் கொண்ட நான், ‘இனி என் மேல் கைவைத்தால் நீ மெட்ராஸ் பார்க்கமாட்டாய்’ என கூறினேன்” என ஹரிஸ்ரீ அசோகன் குறிப்பிட்டிருந்தார். திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ள சமயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே மலையாள சினிமாவிலும் மன்சூர் அலிகானின் நடவடிக்கைகள் பலரையும் அதிர வைத்துள்ளது.
hari

மன்சூர் அலிகான் பல ஆண்டுகளாகவே இப்படி தான் பல மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் ரசிகர்கள் பலர் தங்களின் கோபத்தை கொப்பளித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews