Connect with us

நடிகை விஜயலட்சுமியினை மிரட்டிய வழக்கு: பிப்ரவரி 3ம் தேதி வரை ஹரிநாடாருக்கு சிறை தண்டனை!

harinad

செய்திகள்

நடிகை விஜயலட்சுமியினை மிரட்டிய வழக்கு: பிப்ரவரி 3ம் தேதி வரை ஹரிநாடாருக்கு சிறை தண்டனை!

நடிகை விஜயலட்சுமியினை மிரட்டிய வழக்கு: பிப்ரவரி 3ம் தேதி வரை ஹரிநாடாருக்கு சிறை தண்டனை!

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படும். இதனால் ஒரு கிராம் தங்கம் வாங்குவது கூட மக்கள் அவதிப்படுவார்கள். இதன் மத்தியில் தனது உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு இருப்பவர் தான் ஹரிநாடார்.

இவர் அரசியல் பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் காலடி வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஹரிநாடாருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஹரிநாடார் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரை 15 நாட்கள் காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிநாடார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பது பற்றி நாளை காலை 10 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார். சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியை ஹரிநாடார் மிரட்டியதாக வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top