ஹரி இயக்க அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

அருண் விஜய் தற்போது யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இவர் நடிகர் அருண் விஜய்யின் மைத்துனர் ஆவார்.

சூர்யாவிடம் கால்ஷீட் பேசிய இந்த படம் தற்போது அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அருண் விஜயை வைத்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் ராமேஸ்வரம், காரைக்குடி, நாகூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளால் இதில் மாறுதல் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியிடப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment