இங்கிலாந்தை பொளந்து எடுத்த பாண்டியா!! ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல;

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா, இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியினை மேற்கொண்டது. இதில் கேப்டனாக வேகபந்துவீச்சாளர் பும்ரா செயல்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் இடையில் கோலிக்கும் இங்கிலாந்து வீரர் ஜானி போர்ஸ்டோக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையில் தற்போது இந்தியா, இங்கிலாந்துடன் 5, 20 ஓவர் போட்டிக்கான தொடரை மேற்கொண்டுள்ளது. இந்த போட்டி இன்று நள்ளிரவு தொடங்கியது இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 198 ரன்கள் அடித்தது.

இந்தியாவில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 51 ரன்கள் எடுத்திருந்தார். அதர் பின்பு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர்.

அவர்கள் 19.3 ஓவர்களில் 148 ரன்கள் ஆட்டமிழந்தது. இந்தியாவின் தரப்பிலிருந்து ஹர்திக் பாண்டியா நாலு விக்கெட்களை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 5, 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்டநாயக்கனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...