Connect with us

மாணவிக்கு பாலியல் தொல்லை:அதிரடி காட்டிய போலீசார்!!

202107280130520401 pocso act SECVPF

தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொல்லை:அதிரடி காட்டிய போலீசார்!!

கரூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவத்தில் தமிழாசிரியர் மற்றும் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சில்மிஷம் என்பது அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

அந்த வகையில் கரூர் மாவட்டம் கடவர் ஊராட்சி ஒன்றியம் பாப்ரெட்டி பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தமிழ் ஆசிரியராக நில ஒளியன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மாணவிக்கு அத்துமீறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவிக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டு தொல்லை கொடுத்தது மற்றும் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து அனுப்பி வைத்தது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் ஏற்கனவே நிலஒளியை கைது செய்தனர். அதேசமயம் பள்ளியின் தாளாளரான சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. மேலும், 2 நபர்களையும் போலீசார் அவர்களை போக்சோவில் கைது செய்ததாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top