Connect with us

பெட்ரோல், டீசல் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி.!! எட்டு ரூபாய்வரை விலை குறைவு;

பெட்ரோல்

Tamil Nadu

பெட்ரோல், டீசல் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி.!! எட்டு ரூபாய்வரை விலை குறைவு;

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி காணப்பட்டது. அதுவும் குறிப்பாக பெட்ரோல் ஆனது லிட்டருக்கு ரூபாய் 110.85 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதே வேளையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் கவலையோடு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று இன்றைய தினம் சென்னையில் தாறுமாறாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதாக காணப்படுகிறது.

அதுவும் ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய் வரை குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 8.22 குறைந்து அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ஒரு டீசலில் ஆறு ரூபாய்க்கு மேல் குறைந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்ததாக காணப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 6.70 குறைந்து ரூபாய் 94.24 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top