அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஹேப்பியான செய்தி: சாதனை ஊக்கத் தொகை அறிவிப்பு!

பொங்கல் திருநாள் என்றாலே வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி‌ கொண்டாடுவார்கள். பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருவாரியான நிறுவனங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்படும். என்னதான் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அன்றைய தினம்தான் கடினமான வேலையாக காணப்படும்.

ஏனென்றால் சிறப்பு பேருந்துகள் ஏராளமாக தமிழகத்தில் இயக்கப்படும். அதனால் அவர்கள் இரவு பகல் பாராமல் கடினமாக உழைப்பவர்கள். இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி பொங்கலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 167 ஊழியர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இந்த பொங்கலை கொண்டாட உள்ளனர். இதற்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment