நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தங்கம் விலை அதிரடி குறைவு..

உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக போர் நிலவி வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யாவின் செயல்களுக்கு பல பொருளாதர தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கச்சா எண்ணெய்யை தொடர்ந்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பங்குச்சந்தையின் கடும் சரிவால் தமிழகத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இதனிடையே இன்று  ஆரணத்தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.4,792 ஆகவும், சவரனுக்கு ரூ.38,336 ஆகவும் விற்பனையாகிறது.

இதே போன்று 24 கேரட் ஆரணத்தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.5,228 ஆகவும் சவரனுக்கு ரூ. 41,824 ஆக விற்பனையாவதால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment