மக்களாட்சியின் நான்காவது தூண்; தேசிய பத்திரிக்கை தின வாழ்த்து-ஸ்டாலின்!

வருடத்தில் 365 நாட்களில் உள்ள  ஒவ்வொரு நாளிலும் ஏதேனும் ஒரு சிறப்பு நாளாக அமைந்துள்ளது. அதன்படி வரலாற்றில் இன்றைய தினம் தேசிய பத்திரிக்கை தினமாக கொண்டாடப்படுகிறது.உலகத்தில் உள்ள உண்மைகள் அனைத்தையும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக யாராவது பாடுபடுபவர்கள் பத்திரிகையாளர்கள்.

ஸ்டாலின்

இத்தகைய பணியை பத்திரிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் பொதுமக்கள், தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களை போற்றும் நாள் இன்று என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இனிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர்  ஸ்டாலின் கூறியுள்ளார். தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment