இனி ஜனவரி 12ஆம் தேதி உலகத் தமிழ் தினம்! மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள்…

தமிழர்களின் பெருமை தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பறை சாற்றப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தொடங்கியுள்ள இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழைப் பற்றி ஆளுநர் ரவி பேசினார். அதன்படி ஜனவரி 12-ஆம் தேதி இனி உலகத் தமிழ் நாளாக கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ்ப் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் இனி நடக்கவிருக்கும் அரசு விழாவில் கட்டாயமாக தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

அதன் தொடர்ச்சியாக மேகதாது அணை பற்றியும் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் பேசினார். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் வேலை வாய்ப்பு பற்றியும் அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கு என தகவல் தொழில்நுட்ப கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 999 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ 66 ஆயிரத்து 730 கோடி முதலீட்டுக்கு 109 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருமொழி கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் ஆளுநர் ரவி  கூறினார். ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கான இரண்டு தொலைநோக்கு திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்று ஆளுநர் ரவி  பேசினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment