பிரசிடெண்ட், பிரதமர் வாழ்த்து! வேற லெவல் ஹாப்பி!! குஷியில் ரஜினி!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 67வது தேசிய சினிமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் தமிழகத்தில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் விருது கிடைத்தது.ராம்நாத் ரஜினிகாந்த்

அதில் மிகப்பெரிய விருதாக காணப்பட்டது தாதா சாகேப் பால்கே. இந்த தாதா சாகேப் பால்கே விருதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பெரும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நேற்றைய தினம் நன்றி தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளார்.  அவர் ஜனாதிபதியையும், பிரதமரையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரு மகிழ்ச்சியுடன் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏனென்றால் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கையுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும், பாரத பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment