கண்ணுக்கே தெரியாமல் காற்றின் மூலம் பரவி மனிதனுக்கு மிகப் பெரிய தொந்தரவை கொடுத்து இறுதியில் மனிதனின் உயிரை வாங்கும் மிகக்கொடிய வைரஸ் கிருமி கொரோனா ஆகும்.
இந்த கொரோனா முதலில் சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சீனா நாடு முழுவதும் பரவி சில மாதங்களிலேயே உலகில் உள்ள பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் கிருமி வேகமாகப் பரவியது.
அதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா உயிரிழப்புகள் ஏராளமாக குவிந்து வந்தன. இதனால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாடுகளுக்குள் வேறு வெளிநாட்டுக்காரர்கள் வர அனுமதி மறுத்து இருந்தது.
இந்த நிலையில் இத்தகைய கொடுமையான கொரோனா வைரஸ் கிருமியானது சீனாவில் நவம்பர் 17-ஆம் தேதி, இன்றைய தினம் கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸ் கிருமி தோன்றி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இணையதளத்தில் ஹாப்பி பர்த்டே கொரோனா என்ற ஹேஸ்டேக் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மீண்டும் இந்த கொரோனா நோயும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியுள்ளது.