மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; ‘வங்கி கடன் மேளா’ நடத்த உத்தரவு!
தொடர்ச்சியாக நம் தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மகளிருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து தமிழக அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதுவும் குறிப்பாக மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணம் கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டம் ஒன்று நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வங்கி கடன், சுயதொழில் புரிவதை ஊக்குவித்தல் வகையில் வங்கி கடன் மேளா நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதனால் வங்கி கடன் மேளா மூலம் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மிகவும் பயன்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
