மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வு!
நம் தமிழகத்தில் நடப்பாண்டிற்கான இறுதி பொதுத் தேர்வு மே மாதம் இரண்டாம் தேதி தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று அரசுத் தேர்வுத்துறை கூறியுள்ளது. இதனால் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுவரை நடத்தப்படாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அளித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே இன்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடத்தப்படாத பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
