ஓடும் பேருந்தில் இறங்கிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு சேலத்தில் இருந்து நாமக்கல்லை நோக்கி தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது.

சென்னையில் அதிர்ச்சி!! ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி ஒருவர் பலி..!!

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாது மகன் கேமராஜ் நீட் தேர்வுக்கு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. வகுப்பு முடிந்த பிறகு மீண்டும் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் பிடித்ததால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு… இன்று மீண்டும் விசாரணை..!!!

இருப்பினும் மாணவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் ஆய்வாளர் நித்யா வாகன தனிக்கையில் ஈடுப்பட்டு இருந்த போது சம்பவத்தை பார்த்த உடனே ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், தனியார் பேருந்தில் விதிகளை மீறி இறங்கிய மாணவன் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.