ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்போவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 108 அடி உயர அனுமன் சிலையினை டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய போது.
இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக ‘அனுமன்ஜி 4 தாம்’ திட்டத்தை தொடங்கியது.
குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலை திறப்பதில் ஒரு பகுதியாக நான் இருந்தது மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். இதனையடுத்து இந்தியாவில் நான்கு திசைகளிலும் அனுமன் சிலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு 2010-ல் வடக்கு பகுதியான சிம்லாவில் நிறுவப்பட்டதாகவும், தற்போது குஜராத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில் தெற்கே தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 3-வது அனுமன் சிலையும், மேற்கு வங்கத்தில் 4-வது சிலையும் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.