Connect with us

போர்க்களம் போல் காட்சியளித்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் !! பின்னணி என்ன ?

pti04 16 2022 000285b 1650126893 down 1650161077

செய்திகள்

போர்க்களம் போல் காட்சியளித்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் !! பின்னணி என்ன ?

போர்க்களம் போல் காட்சியளித்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் !! பின்னணி என்ன ?

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருதரப்பினர்கிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரையொருவர் கல்வீசி தாக்கி கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் ஒருவர்  பலத்த  காயமடைந்துள்ளனர்.

டெல்லி, ஜஹாங்கீர் புரி பகுதியில் நேற்று மாலையில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில்  கலவரம் வெடித்தது.  குறிப்பாக  அங்கு சிலை வைப்பதில் இருதரப்பினர் இடையே ஒருவரையொருவர் கல்வீசி தாக்கி கொண்டதால் அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது.

கலவரத்திற்கு அஞ்சி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். பல வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டன.

இந்நிலையில் ஜஹாங்கீர் புரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமிர்ஷா காவல்துறையினருடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த கலவரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி மக்கள் அமைதி காக்கும் படி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top