திருமணத்திற்கு தயாரான ஹன்சிகா.. மாப்பிள்ளை யாருனு தெரிஞ்சா அசந்துருவீங்க?

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, 2011-ம் ஆண்டு நடிப்பில் தனுஷ் வெளியான மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார், அதை தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு சிவகார்த்திகேயன் என பல முன்னை ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

hansika 1608294406

ஹன்சிகா வந்த சிறு ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் பார்ப்பதற்கு முன்னாள் நடிகை குஷ்பு போல இருப்பதால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். தொடர்ந்து உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது.

பல முயற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்த ஹன்சிகா சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா வெளியானது. அந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார், மேலும் அவர் சிம்புவை காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

DJmpNkSUEAAed1I

மேலும் அவர் தமிழில் 4 படங்கள் தெலுங்கில் 3 படங்கள் என தன கைவசம் வைத்துள்ளார், இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. காதல் திருமணம் செய்யாமல் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

வெந்து தணிந்தது காடு படத்தின் டாப்பிங் முடித்த ஹீரோயின்! வெளியான கலக்கல் புகைப்படம்!

முன்னணி நடிகைகள் திருமணம் செய்ய உள்ளதாக அவ்வப்பொழுது புரளிகள் வருவதும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆவதும் உண்மைதான். ஹன்சிகா தரப்பில் இருந்து அதிகார பூர்வத்தகவல் வரும் வரை காத்திருக்கவும்…

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment