கல்யாணமான சில நாட்களில் விவாகரத்தா? ஹன்சிகா வீட்டில் பரபரப்பு!

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமாகி ஒரு சில நாட்கள் தான் ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து ஆகி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஹன்சிகா தனது தொழில் பார்ட்னர் கதுரியா என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

hansika brotherஇந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது காதலியை திருமணம் செய்தார்/ இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் விவாகரத்து பெற்று விட்டதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஹன்சிகாவுக்கு திருமணமாகி ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹன்சிகாவின் திருமணத்தில் அவருடைய அண்ணன் மனைவி கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து ஹன்சிகா வீட்டினர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக கூறினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.