கைத்தறி பொருட்கள், காஞ்சி பட்டு சேலை, பவானி ஜமக்கலம் டிஜிட்டல் மயமாக்கல்!

முதன்முறையாக, காஞ்சிபுரம் பட்டுப் புடவை, பவானி ஜமக்கலம், மதுரை சுங்குடி சேலை, சேலம் வெண்பட்டுத் தொட்டி உள்ளிட்ட புவியியல் அடையாளமும் பாரம்பரியமும் கொண்ட தமிழகத்தின் கைத்தறித் தயாரிப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆவணப்படுத்தப்படும்.

பாரம்பரிய கைத்தறி பொருட்களை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் ஆவணப்படுத்துவதற்கான மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

புவியியல் குறியீட்டுச் சட்டத்தின் கீழ் பொருட்களைப் பதிவுசெய்வது, உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்து உரிமைகள் (TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் வரும் சிறப்பு தயாரிப்புகளின் விற்பனையை மட்டுமல்லாமல், அத்தகைய பொருட்களின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கிறது.

டிஜிட்டல் மயமாக்கல் அடுத்த தலைமுறையினரையும் சென்றடையும், அவர்களும் தயாரிப்புகளை ஊக்குவிப்பார்கள் என்றார்.

பட்டுப் புடவை, கோவை கோரா காட்டன், சேலை, திருபுவனம் பட்டுப் புடவை, கண்டாங்கி சேலை ஆகியனவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்காக மாநில அரசு ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்: உதயநிதியின் 2 நாள் பிரசாரம்!

புவியியல் குறிப்பிடப்பட்ட மற்றும் பாரம்பரிய கைத்தறி பொருட்களின் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலமாகவும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.