Connect with us

கனிம வளம் கொள்ளை கடுமையான முறையில் கையாளுங்கள்

News

கனிம வளம் கொள்ளை கடுமையான முறையில் கையாளுங்கள்

8c2f4199b2d26cba9ea0497dcd02337e

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப நம் இந்தியாவில் அதிகமான கனிம வளங்களும் கரிம வளங்களும் வன வளங்கள் போன்ற பல வளங்கள் நிறைந்த இந்தியாவாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காடுகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சில தினங்கள் முன்பாக வனப்பகுதிகளில் ஒரு அங்குலம் கூட அதிகமாக ஆக்கிரமிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆயினும் பல பகுதிகளில் இந்த கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன.25b39d95dfef543cd6e2d94a4bbd737e

இதனை தடுக்கும் முறையாக தற்போது ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது . கனிம வளங்களை கொள்ளை அடிப்பதை தமிழக அரசு கடுமையான முறையில் கையாள வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. தனி கவனம் செலுத்தி கனிமவள கொள்ளை தடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி திருப்பெயர் கிராமத்தில் கல் குவாரிகள் பற்றிய தகவல்களை வருவாய்த்துறையினர் மறுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது மேலும் 2005 முதல் 2020 வரையிலான ஏற்பட்ட கனிம வள இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரபு கூறியுள்ளார்.இதுநாள் பல பகுதிகளில் அரசானது தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top