செய்திகள்
ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைப்பு!!
தற்போது நம் தமிழகத்தில் கொள்ளை சம்பவம் அதிகமாக நிகழ்கிறது. மேலும் அதிகமாக படித்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் தங்களது படிப்பறிவை இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்துவது, நூதன முறையில் திருடுவது போன்றவைகளுக்கு மக்களுக்கு கஷ்டத்தை விளைவிக்கிறது. திருடப்பட்ட பொருட்கள் நகைகள் பணம் போன்றவைகள் பறிமுதல் செய்யப்படுகிறது.
அதில் தற்போது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 2020-2021 காணாமல் போன ரூபாய் 10 லட்சம் மதிப்பில் உள்ள செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் கடந்த 2020- 2021 இல் மட்டும் 98 பேர் செல்போன்களை காணவில்லை என புகார் அளித்தனர். மேலும் சைபர் கிரைம் போலீஸ் விசாரித்தது. இதனால் தற்போது அந்த மொபைல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மிகவும் பாராட்டியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்று காவல்துறையினரின் பலர் பெரும் முயற்சிகள் காணப்படுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
