கை மேல் பலனளிக்கும் மாம்பழ பெட்டிகள்.. ஏலத்தில் 31,000-த்தை எட்டியது..
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள ரத்னகிரி அல்போன்சோ வகை மாம்பழ பெட்டியை யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
காய்ப்பு தொடங்கி வருட தொடக்கத்திற்கு வரும் முதல் மாம்பழத்தை வாங்கினால் அந்த ஆண்டு வியாபாரம் நஷ்டம் இல்லாமல் நடைபெறும் என்பது புனேவை சேர்ந்த வியாபாரிகளின் நம்பிக்கை.
அந்த வகையில் ரத்னகிரியில் வந்த 5 மாம்பழ பெட்டிகள் பெட்டி ஒன்றுக்கு 60 என்ற எண்ணிக்கையில் அல்போன்சா மாம்பழங்கள் கொண்டுவரப்பட்டன.
புனே ஏபிஎம்சி சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் பெட்டி ஒன்று
ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் அறிவிக்கப்பட்டது.
இதில் வியாபாரிகளிடம் கடும் போட்டி நிலவியதால் மீட்டர் வேகத்தில் நடைபெற்றது. இதில் முதல் நான்கு பெட்டிகள் முறையே 18,000 , 21,000 , 25,000 , 25,000 என்ற விலைக்கு ஏலம் விடப்பட்டது.
இந்த நிலையில் கடைசியாக இருந்த பெட்டியை யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
