மாணவர்களே ரெடியா! நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு கல்வி ஆண்டில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பாக 12, 11-ம் வகுப்பில் அரியர் வைத்திருக்க கூடிய மாணவர்களின் பெயர் நீக்குதல், சேர்த்தல், பிழைகளை திருத்தல் உள்ளிட்டவைகளுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இன்றைய தங்கம் விலை (03-01-2023): 42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

இதனிடையே அனைத்து பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பதிவிறக்கம் செய்யப்படும் மாணவர்களின் தேர்வு எண்ணும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் 12 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க இருப்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முன்கூட்டியே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன்கள் வினியோகம்!!

மேலும், தேர்வுத்துறை இணையதளத்தின் மூலமாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்வேர்டு மற்றும் ஐடியை பயன்படுத்தி பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.