Connect with us

12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்: தேர்வுத்துறை அறிவிப்பு

Tamil Nadu

12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்: தேர்வுத்துறை அறிவிப்பு

e149345f9e0e24c6d7c6560da6395ccc

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் உள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் தேர்வுகள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 27ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பம் செய்யலாம் என்றும் ஆகஸ்டு 9 முதல் 16 வரை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நாளை முதல் இணைய தளங்களில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நாளை முதல் விருப்பத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top