
தமிழகம்
10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்!!
நம் தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வானது ஏப்ரல் மாதத்திற்குள் நடந்து முடிந்துவிடும். ஆனால் கடந்த கல்வி ஆண்டிலோ மே மாதம் வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர் ஜூன் மாதத்திலேயே அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தெரிகிறது. ஜூன் 13ஆம் தேதி முதலே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில் அடுத்தடுத்து துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட் பற்றிய தகவல்கள் கிடைத்து கொண்டிருந்தன.
அந்த வரிசையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் நடைபெற உள்ள தேர்வுக்கு www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
