துப்பாக்கி படத்தில பாதி, பப்ஜி கேம்ல மீதி; மாஸ் காட்டிய ‘பீஸ்ட் ட்ரெய்லர்’!
மக்களிடையே தளபதி என்று அழைக்கப்படுகிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
அதோடு மட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படம் கே ஜி எஃப் 2 திரைப்படத்தோடு நேரடியாக மோதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சமயத்தில் இன்றைய தினம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அதன்படி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் அதிகாரபூர்வமான டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது. இதில் பார்க்கும்போது நடிகர் விஜய் ராணுவ வீரராக சோல்ஜர் ஆக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
ஒரு டிடெக்டிவ் ஏஜென்டாக அவர் இந்த படத்தில் வலம் வருவார் என்றும் பேசப்படுகிறது இதனால் ரசிகர்கள் பலரும் தற்போதே கொண்டாட தொடங்கியுள்ளனர்.
