குஷியோ குஷி!! அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது.

இதற்கிடையில் டிச.23-ல் தேர்வுகள் முடிவடைந்து, 24 முதல் விடுமுறை அறிவிக்கப்படும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மாண்டஸ் புயல் போன்ற பல்வேறு காரணங்களினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று முதல்! ஆவின் வெண்ணெய் விலை உயர்வு.. பொதுமக்கள் கவலை!!

இதனால் வருகின்ற 24-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் படி, டிச.25 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜன.2-ம் தேதி முதல் பள்ளி வழக்கம் போல் இயங்கும் என்ற தகவலையும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

குமரியில் பயங்கரம்! நடுரோட்டில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!!

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் இத்தகைய அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.