மீண்டும் வெடித்தது ஹலால் சான்று விவகாரம்: கர்நாடகாவில் பரபரப்பு!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் ஹலால் சான்று பெற்ற இறைச்சிகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் ​​பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வருகின்ற திங்கட் கிழமை சட்டசபை கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய செயலுக்கு அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு பாஜக எம்.எல்.ஏ என் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் உச்சக்கட்டத்தை தொட்டுள்ள நிலையில் ஹலால் இறைச்சி தடை விதிக்க இந்துத்வ அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருவதால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.