இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக காணப்படுகின்ற ஹச் பகுதிக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவில் 20 விமான நிலையங்கள் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.அதனை 10 விமான நிலையமாக குறித்து அறிக்கை வெளியானது .
அதனை குறித்து அறிக்கை வெளியானது இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹஜ் புனித பயணம் பற்றி எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி 2022ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு விமானம் இயக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஹஜ் புனித பயணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சென்னை உட்பட 21 நகரங்களில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல சவுதி அரேபியாவுக்கு விமானங்கள் தயாராக உள்ள நிலையில், தற்போது இந்தியாவின் 10 நகரங்களில் இருந்து மட்டுமே ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.
ஹஜ் புனித பயணத்திற்கு விமானங்கள் இயக்கப்படும் நகரங்களில் சென்னையும் திருச்சியும் புறக்கணிக்கப் பட்டுள்ளன என்றும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா குறைந்து வருவதுடன், அடுத்த ஆண்டு மே,ஜூன் மாதங்களில்தான் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து ஹஜ் புனித பயண விமானங்களை இயக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.