‘ஹஜ் பயணம்’: சென்னை விமான நிலையம் பெயர் புறக்கணிப்பு- வைகோ குற்றச்சாட்டு!

ஹஜ் பயணம்

தமிழகத்தில் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவர் வைகோ. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக வைகோ உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் ஹஜ் பயணம் குறித்து குரல் கொடுத்துள்ளார்.வைகோ

அந்த ஹஜ் பயணத்தில் சென்னை விமான நிலையம் பெயர் நீக்கப்பட்டுள்ளது எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குரல் கொடுத்துள்ளார். அதன்படி இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விமான நிலைய பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தியாவின் 20 விமான நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு இருபது என்ற எண்ணிக்கையை 10ஆக குறைத்து விட்டார்கள்.

இதன் விளைவாக சென்னை விமான நிலையத்தின் பெயர் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, அந்தமான் முஸ்லிம்களுக்கும்,சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்திற்கு வழியாக அமையும் என்றும், சென்னை விமான நிலையத்தில் மூலமாகத்தான் ஹஜ் பயணம் மேற்கொள்வர் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இனி கொச்சி, பெங்களூர் அல்லது ஹைதராபாத் சென்று தான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்கு பெருத்த அலைச்சலையும், கூடுதல் பொருள் செலவையும் இவ்வாறு மாற்றியது ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தை பட்டியலில் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print