ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை!:எம்.பி வெங்கடேசன் ட்வீட்;

இஸ்லாமியர்களின் புனித பயணமாக காணப்படுவது ஹஜ் யாத்திரை. இந்த ஹஜ் யாத்திரை குறித்து சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சில அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளது.

வெங்கடேசன்

அதன்படி ஹஜ் பயணத்திற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் இயக்கப்படாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பதாக 21 விமான நிலையங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில் அதை குறைத்து பத்தாக மாற்றியது மத்திய அரசு.

இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். தற்போது மதுரை மாவட்ட எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதன்படி ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை என்று அவர் கூறியுள்ளார். கோவிட் காரணமாக கடந்த ஆண்டு புறப்பாட்டு மையங்கள் 21 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டது.

இந்த ஆண்டும் 10 மையம் என்ற எண்ணிக்கை பொருத்தமல்ல என்றும் எம்பி வெங்கடேசன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று மதுரை எம்பி வெங்கடேசனை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment