இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான ஹஜ் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு கிடைத்தது.
ஏனென்றால் இந்த ஹஜ் பயணத்துக்கு நம் தமிழகத்தில் உள்ள சென்னை விமான நிலையம் பெயர் புறக்கணிக்கப்பட்டது .இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி வாழ் இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள கொச்சின் அல்லது பெங்களூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் செலவு அதிகமாகும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மகிழ்ச்சி அளிக்கும் பதில் ஒன்று கூறியுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் பயணத்துக்கு புறப்பாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா காரணமாகவே இந்த ஆண்டு சென்னையை புறப்பாட்டு இடமாக தேர்வு செய்யவில்லை என்றும் புகார் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் சென்னை ஏர்போர்ட் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கூறியதற்கு நன்றி என்றும் தமிழகம் இருந்த ஸ்டாலின் கூறினார். தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு கொச்சி விமான நிலையத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.