தலைமுடி கொட்டுவதைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!!

94f54721fe0d1cd2be0f825d5470b22a

தலைமுடி கொட்டுவதற்கு பொடுகுத் தொல்லை, உடல் சூடு, சரியான பராமரிப்பின்மை எனப் பல குறைபாடுகள் காரணமாகும். இப்போது நாம் தலைமுடி கொட்டுவதைச் சரிசெய்யும் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாதாம்- 8
வெங்காயம்- 1
பூண்டு- 10 பல்
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

செய்முறை:
1.    பாதாமை துருவி கொண்டு நன்கு துருவிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி பாதாம் துருவல், வெங்காயம், பூண்டு இவை அனைத்தையும் போட்டு 2 நாட்களுக்குக் குறையாமல் ஊறவிடவும்.
3.    அடுத்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டினால் ஹேர் ஆயில் ரெடி.
இந்த ஹெர்பல் ஹேர் ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.