பல பிரபலங்கள் உட்பட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தகவல்கள் மூலம் திருடப்பட்டதாகவும் திருடியவர்கள் பெரும் தொகை வேண்டும் என பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என டுவிட்டரில் கணக்கு வைக்காத பிரபலங்களே இல்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு மாறியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சோதனை வந்துள்ளது.
சுந்தர் பிச்சை, சல்மான்கான் உள்பட மொத்தம் 40 கோடி பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டதாகவும் அந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரும்தொகை வேண்டும் என்று ஹேக்கர்கள் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மில்லியன் கணக்கான டுவிட்டர் பயனர்களின் தகவல்களை திருட பட்டதாக செய்தி வெளியான நிலையில் தற்போது 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தகவல்களை திருட பட்டுள்ளதாக வெளிவந்ததும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சிக்கலை டுவிட்டர் நிறுவனம் எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் பயனாளர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், இமெயில் உள்பட அனைத்து முக்கிய தகவல்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டு உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.