மக்களே உஷார்!! செல்போன்களை குறி வைக்கும் ஹேக்கர்கள்..
அலைப்பேசிகள் மற்றும் கம்ப்யூட்டர்களை இணையதளம் மூலம் ஹேக் செய்பவர்கள் குறுஞ்செய்திகளை மின்னஞ்சல்கள் அல்லது வாட்ஸ் அப் மூலம் ஏதாவது ஒரு லிங்கை அனுப்புவார்கள்.
அதை கிளிக் செய்து திறந்து பார்த்தால் முக்கியத் தகவல் அல்லது பரிசு கிடைக்கும் என்று ஆசை காட்டும் செய்திகளை அதனுடன் அனுப்புவார்கள்.
இத்தகைய லிங்குகளை கிளிக் செய்தால் அந்த அலைபேசி அல்லது கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் அனுப்பிய ரகசிய மென்பொருள் உள்ளே புகுந்து உரிமையாளர்களின் அந்தரங்க தகவல்களை திரட்டி அனுப்பும்.
வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் தகவல்களை அனுப்பும். ஆனால் இத்தகைய லிங்குகள் எதுவும் இல்லாமல் நேரடியாக ஹேக் செய்யும் அதிநவீன தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளனர்.
பேரகன், கேட்டிரு, காக்நைட் போன்ற சாப்ட்டு வேர்களை இஸ்ரேலியன் நிறுவனங்கள் இத்கைய கிளிக் இல்லா ஹேக் செய்யும் மென்பொருள் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பிரிட்டனில் உள்ள அல் அரபிக் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் ரேனியா 3டியின் அலைபேசி இத்தகைய கிளிக் எல்லாம் மூலம் ஹேக் செய்யப்பட்டுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரையில் பல ஹேக்குகள் வந்திருந்தாலும் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருந்தால் அவற்றில் இருந்து தப்பிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறிவந்தனர். ஆனால் இந்த ஹேக்குகளில் இருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லை என்பது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
