பெற்றோர்களே உஷார்!! குழந்தைகளை குறிவைக்கும் H1N1 காய்ச்சல்..!!

தமிழகத்தில் சில வாரங்களாக ஃபுளூ காய்ச்சல் பரவிவரும் நிலையில், சென்னையில் எச்1என்1 காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றின் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய காய்ச்சல் சுமார் ஏழு நாட்கள் வரையில் குழந்தைகளை பாதிப்பதாக தெரிகிறது.

இத்தகைய காய்ச்சலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அதிக படுக்கைகள் நிரம்பி உள்ளன. இதனிடையே 3 நாட்களுக்கு மேல் சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாகஎச்1என்1 காய்ச்சல் குழந்தைகளை பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.