Connect with us

ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தில் ஹீரோ அந்த வில்லன் நடிகரா? மாஸான அப்டேட்!

H Vinoth Photos 3

பொழுதுபோக்கு

ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தில் ஹீரோ அந்த வில்லன் நடிகரா? மாஸான அப்டேட்!

ஹெச்.வினோத் தற்போழுது நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்துடன் ஏகே 61வது படத்தை இயக்கி வருகிறார். இவர்களில் கூட்டணியில் 3 வருட எதிர்பார்ப்பில் வெளியான வலிமை படம் மக்களின் மனதை திருப்தி படுத்த தவறியது.

அதனால் இந்த படத்தின் கதைக்களம் குறித்து மிக கவனமாக இருந்து வருகிறார் ஹெச்.வினோத், இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்தும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டும் இயக்கிவருகிறார்.

pic 14

இந்த படத்தை முடித்ததற்கு பின் வினோத் அடுத்து விஜய் சேதுபதி உடன் கூட்டணி இணைய உள்ளதாக என தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஒரு கமர்சியல் படம் கொடுக்க வேண்டும் என ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக விஜய் சேதுபதியின் படங்கள் அதிக அளவில் பேசப்பட்டாலும் அந்த படங்களில் அவர் வில்லனாகவே நடித்து வந்துள்ளார், குறிப்பாக மாஸ்டர் , பேட்ட, விக்ரம் படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் சமீபத்தில் ஹீரோவாக நடித்து வெளியான படமான காத்துவாக்குல இரண்டு காதல் காமெடி கலந்த காதல் படமாக அமைத்தால் வெற்றி பெற்றது,அடுத்ததாக மாமனிதன் நல்ல கதைக்களத்தை கொண்டிருந்தும் வசூல் ரீதியாக சாதனை படைக்க தவறியது.

vijay sethu hvinoth 1637117735

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்தியில் ஷாருக்கான் படமான ஜவான் படத்திலும், இந்தியன் 2 படத்திலும், புஸ்பா 2 படத்திலும் வில்லனாகவே நடிக்க ஒப்பனந்தாமாகியுள்ளார்,இந்நிலையில் விஜய் சேதுபதி முழுக்க முழுக்க ஹீரோவாக நடித்து வரக்கூடிய படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

யோகி பாபு படத்தின் மாஸான புதிய அப்டேட்! வைரலாக போஸ்ட்டர்!

இந்த சூழலில் முழுவதுமாக ஹீரோவாக நடிக்கும் கமர்சியல் படத்தை விஜய் சேதுபதி எதிர்பார்ப்பதால் அவர் அடுத்ததாக ஹெச்.வினோத் உடன் கைகோர்க்கயுள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படம் வேற லெவல் மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top