காவிரி மேலாண்மை அமைய எச்.ராஜா கூறும் புதிய வழி

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை சமீபத்தில் கூட்டி இதுகுறித்து ஆலோசனை செய்தது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமானால் தமிழக அரசியல் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் எச்.ராஜா கூறியதாவது: தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால் எந்தப் பயனும் ஏற்பட போவது கிடையாது. இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். தானாக மத்திய அரசு நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும்.அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைந்துவிடும். காவிரி பிரச்னை இந்த அளவுக்கு விஸ்வருபம் எடுத்ததற்கு தி.மு.க தான் காரணம்’ என்று கூறினார்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print