News
கந்தசஷ்டி விவகாரத்தில் கண்டிக்காதது ஏன்? ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சியினருக்கு எச்.ராஜா கேள்வி

கந்த சஷ்டி கவசத்தை சமீபத்தில் யூடியூபில் ஒரு நபர் அவதூறாக பேசியதும் அவரது அருவருக்கத்தக்க பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக இந்து மத ஆதரவாளர்கள் திரையுலகினர் உள்பட பலர் இது குறித்து கடுமையான தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்துள்ளார்கள்
இந்து மதத்தினர் மட்டுமின்றி மாற்று மதத்தில் உள்ளவர்களும் இதனை கண்டித்து தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் எந்த ஒரு சமூக விரோத செயலுக்கும் முதல்முதலாக குரல் கொடுக்கும் திமுக தலைவரும் அவருடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியதை திரையுலக நட்சத்திரங்கள் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். ஆனால் இந்து விரோதிகள் ஸ்டாலின், வைகோ, ப.சி, கே.எஸ.அழகிரி ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை. அந்நிய மதக் கடவுள்களை இப்படி யாரேனும் பேசியிருந்தால் இவர்கள் சும்மா இருந்திருப்பார்களா
