அனைத்து ஊராட்சிகளிலும் ஜிம்… அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!

டிவியைப் பார்த்து பார்த்து வீட்டில் உள்ள குடும்ப பெண்களும் உடலை கட்டுகோப்போடு வைத்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு GYM வைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு கொறடா கோவி.செழியன் கோரிக்கை வைத்தார்.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அரசு கொறடா கோ.வி.செழியன் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சாலைகளில், மொட்டை மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களில், உடற்பயிற்சி செய்கின்றனர்.

ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் டிவியைப் பார்த்து பார்த்து உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள விரும்புகின்றனர்.

ஆகவே ஊராட்சி ஒன்றியங்களில் GYM உடற்பயிற்சி கூடம் வைத்து கொடுக்க அரசு முன்வர வேண்டுமெனவும், அரசு முன்வந்தால் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலையே உபகரணங்கள் வாங்கி கொடுக்க தயாராக உள்ளோம் அதற்க்கும் வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார், அப்போது பெண்கள் மீது இவ்வளவு அக்கறை வைத்துள்ளீர்கள் நன்றி என சபாநாயகர் பாராட்டினார்.

அதன் பிறகு பதில் அளித்த ஊரக உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் உடல் பயிற்சி செய்வதால் உடல் நலமும் மன நலமும் சிறப்பாக இருக்கும் என்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறிய அவர் எதிர் காலத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுமென அமைச்சர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment