ஜி.வி.பிரகாஷ் ராஜேஷ் கூட்டணியில் புதிய படம் ஆரம்பம்… விரைவில் பிரபல தொலைக்காட்சியில் வெளியாகலாம்!!!

6345e0f4148abcdef11348d08010def1

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து அசத்தலான தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். 

இவரது நடிப்பில் ஐங்கரன், ஜெயில், பேச்சிலர், அடங்காதே உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கடவுள் இருக்கான் குமாரு படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். இரண்டாவது முறையாக இருவரும் மீண்டும் இணைகின்றனர். 

இத்திரைப்படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான டேனியல், ரேஷ்மா மற்றும் நடிகர் ஆனந்த் ராஜ் நடிக்கின்றனர். 

சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முதல்கட்டமாக 11 நாட்கள் ஷுட்டிங்கை முடித்துள்ளது படக்குழு. மேலும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி நேரடியாக சன் டிவியில் இத்திரைப்படம் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.